மலேசியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் சங்கம்(இந்திய குடியுரிமை)

எங்களை பற்றி

புலம் பெயர்ந்து மலேசியா மண்ணில் வாழும் பொழுது தமிழ் கலாச்சாரம் பண்பாடு கலை ஆகியவற்றை நாம் தொடர்ந்து கடைபிடிக்க நம் இந்திய தமிழ் தொழில் வல்லுனர்களை கொண்டு, இலாப நோக்கமற்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அமைப்பு

எங்கள் இந்திய தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்சிகளை /ஒன்று கூடல் ஏற்பாடு செய்தல்.

சேவை

மலேசியா வாழ் வெளிநாட்டு தமிழர்களுக்கு (இந்தியா) வழிகாட்டுதல் மற்றும் உதவி புரிதல்.

தொடர்பு கொள்ள

contact@tamilexpats.com.my
FaceBook

நோக்கம்

தமிழ் கலை கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் மற்றும் சமூக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல்.

தொலை நோக்கு

மலேசியாவில் உள்ள இந்திய நாட்டு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்புகளை ஏற்படுத்தி பல்வேறு வாய்ப்புகளை வழங்கவும், சமூக விழிப்புணர்வு, தமிழ் மொழி அறிவு, கலை மற்றும் கலாச்சாரம், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க/ கடை பிடிக்க இந்த சங்கம் ஊக்குவிக்கின்றது. இந்தியாவில் இருந்து வேலை தொழில் நிமித்தமாக மலேசியாவில் இருக்கும் நம் தமிழ் மக்களுக்கு கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்த உள்ளது. தமிழ்ப் பண்டிகைகளை ஒன்று கூடி கொண்டாடவும், ஏனைய நாடுகளிலும் உள்ள பல்வேறு தமிழ் சங்கங்களின் மத்தியில் நல்ல புரிந்துணர்வையும், நட்பையும் வளக்கவும் பாடுபடுகின்றது. தமிழ் கலை திறமை வாய்ந்த நமது உறுப்பினர்களை நமது சங்கம் ஊக்குவிக்கின்றது.

படங்கள்